ஆட்டோமொபைல்
ரேன்ஜ் ரோவர் இவோக்

இந்தியாவில் புதிய ரேன்ஜ் ரோவர் இவோக் மாடல்கள் அறிமுகம்

Published On 2020-02-01 08:45 GMT   |   Update On 2020-02-01 08:02 GMT
லேண்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் புதிய ரேன்ஜ் ரோவர் இவோக் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.



லேண்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் புதிய ரேன்ஜ் ரோவர் இவோக் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய தலைமுறை லேண்ட் ரோவர் ரேன்ஜ் ரோவர் மாடலின் துவக்க விலை ரூ. 54.94 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய 2020 ரேன்ஜ் ரோவர் இவோக் மாடலில் பிரீமியம் எல்.இ.டி. ஹெட்லைட்கள், சிக்னேச்சர் டி.ஆர்.எல்.கள், அனிமேட்டெட் டர்ன் சிக்னல் இன்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. உள்புறம் ஆடம்பரம் சார்ந்த மினிமலிஸ்ட் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதிலுள்ள அம்சங்கள் பிரீமியம் பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ரேன்ஜ் ரோவர் இவோக் மாடல் பாரம்பரிய அலுமினியம் ட்ரிம் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் டச் ப்ரோ டுயோ சிஸ்டம், 12.3 இன்ச் இன்டராக்டிவ் டிரைவர் டிஸ்ப்ளே, ஸ்மார்ட்போன் இன்டகிரேஷன், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.



2020 ரேன்ஜ் ரோவர் இவோக் மாடலில் லேன் கீப் அசிஸ்ட், டிரைவர் கண்டிஷன் மாணிட்டர், பின்புற கேமரா மற்றும் 360 டிகிரி பார்க்கிங் ஏய்ட், க்ளியர் எக்சிட் மற்றும் ரியர் டிராஃபிக் மாணிட்டர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

புதிய இவோக் மாடல் இரண்டு பி.எஸ்.6 ரக இன்ஜெனியம் என்ஜின்கள்: 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல், 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 247 பி.ஹெச்.பி. பவர், 365 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

மற்றொரு என்ஜின் 2.0 லிட்டர் டீசல் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 177 பி.ஹெச்.பி. பவர், 430 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. ரேன்ஜ் ரோவர் இவோக் மாடல் ஜீப் ராங்களர், பி.எம்.டபுள்யூ. எக்ஸ்4, ஹோண்டா சி.ஆர். வி மற்றும் வால்வோ எக்ஸ்.சி.60 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.
Tags:    

Similar News