ஆன்மிகம்
ஜெனகை மாரியம்மன்

ஜெனகை மாரியம்மன் கோவிலில் மூன்று மாத கொடியேற்று விழா

Published On 2021-04-13 04:53 GMT   |   Update On 2021-04-13 04:53 GMT
கொரோனா தொற்று காரணமாக கோவில் வளாகத்தில் உள்ள தீர்த்த கிணறு அருகே பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அங்கிருந்து ஜெனகை மாரியம்மன்கோவிலுக்கு வெளியே உள்ள கொடிபீடத்தில் 3 மாத கொடி ஏற்றும் விழா நடந்தது.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் வருடந்தோறும் வைகாசி அமாவாசைக்கு பின்னர் வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றம் நடைபெறும். இதைத் தொடர்ந்து 17 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறும். இதற்கு முன்பாக பங்குனி மாத அமாவாசைக்கு பின்னர் வரும் திங்கட்கிழமை சுற்றுப்புற கிராம பக்தர்களுக்கு திருவிழா நடத்துவதற்கு முன் அறிவிப்பாக 3 மாத கொடியேற்று விழா நடைபெறும்.

இதேபோல் இந்த ஆண்டு திருவிழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்கான 3 மாத கொடியேற்று விழா நேற்று இரவு நடந்தது. பக்தர்களுக்கு கை கழுவும் எந்திரம் மூலம் கை கழுவ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முக கவசமும் வழங்கப்பட்டது. சண்முக வேல் அர்ச்சகர் 3 மாத கொடிக்கம்பத்தை எடுத்து கோவில் வளாகத்தை சுற்றி வந்தார்.

கொரோனா தொற்று காரணமாக கோவில் வளாகத்தில் உள்ள தீர்த்த கிணறு அருகே பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அங்கிருந்து கோவிலுக்கு வெளியே உள்ள கொடிபீடத்தில் 3 மாத கொடி ஏற்றும் விழா நடந்தது. செயல் அலுவலர் இளமதி, கிராம நிர்வாக அலுவலர் செல்வமணி, உபயதாரர் காவல் ராசு அம்பலம் குடும்பத்தினர், கோவில் பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Tags:    

Similar News