ஆன்மிகம்
எருமப்பட்டி அருகே பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலம்

எருமப்பட்டி அருகே பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலம்

Published On 2020-12-12 06:13 GMT   |   Update On 2020-12-12 06:13 GMT
செல்லாண்டி அம்மன் கோவிலில் ஊர் பொதுமக்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் வழிபட்டனர். மேலும் பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக சென்று தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
எருமப்பட்டி அருகே உள்ள வரகூர் ஊராட்சியில் செல்லாண்டி அம்மன் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் வரகூர் மக்கள் விவசாயம் செழிக்கவும், மக்கள் நலன் வேண்டியும் செல்லாண்டி அம்மனுக்கு பொங்கல் வைத்தும், மாரியம்மன் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்தும், தீச்சட்டி எடுத்து அலகு குத்தியும் வேண்டுதல் நிறைவேற்றுவது வழக்கம். 

அதேபோல இந்த ஆண்டும் ஊர் பொதுமக்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் வழிபட்டனர். மேலும் பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக சென்று தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
Tags:    

Similar News