செய்திகள்
ராகுல்காந்தி

100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் மறுப்பு - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

Published On 2021-07-07 00:11 GMT   |   Update On 2021-07-07 00:11 GMT
பெருந்தொற்று காலத்தில் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதியுதவி அளித்திருக்க வேண்டும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி:

100 நாள் வேலைத்திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம், நாடு முழுவதும் நடைமுறையில் இருக்கிறது. இந்த திட்டம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சில மாநிலங்களில் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த பெருந்தொற்று காலத்தில் அவர்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதியுதவி அளித்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக, அவர்களின் உரிமையான சம்பளமும் மறுக்கப்பட்டுள்ளது.

பொய் வார்த்தை ஜாலங்களுக்கு அப்பாலும் ஒரு உலகம் இருக்கிறது. அங்கு சில வீடுகளில் மக்கள் குடும்பம் நடத்த வழி தெரியாமல் தவிக்கிறார்கள். இவை என்ன வகையான நாட்கள்?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News