உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கோழி குஞ்சு பொரிப்பகத்திற்கு பணியாளர்கள் நியமனம் - அரசுக்கு கருத்துரு அனுப்பிவைப்பு

Published On 2022-01-13 05:09 GMT   |   Update On 2022-01-13 05:09 GMT
குஞ்சு பொரிப்பகத்தில் கால்நடை ஆய்வாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
உடுமலை:

கால்நடை பராமரிப்புத்துறையால் உடுமலை அடுத்த குறிச்சிக்கோட்டையில் குஞ்சு பொரிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நாட்டுக்கோழி குஞ்சுகள் மட்டுமே பொரிக்கப்பட்டு வருகிறது.

இதற்காக நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட ‘போல்ட்ரி ரிசர்ச் ஸ்டேஷனில்’ இருந்து கருமுட்டைகள் கொண்டு வரப்பட்டு அடைகாப்பான்கள் வாயிலாக கோழிக்குஞ்சுகள் பொரிக்கப்படுகின்றன.

ஆனால் பணியாளர்கள் பற்றாக்குறையால் கடந்த சில மாதங்களாக முட்டைகள் அடைக்காக்கப்படுவதில்லை. குஞ்சுகள் உருவாக்கம் தடைபட்டுள்ளதால் பயனாளிகள் பலரும் வருவாய் ஈட்ட முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கால்நடைத்துறை உதவி இயக்குனர் ஜெயராம் கூறுகையில்: 

குஞ்சு பொரிப்பகத்தில் கால்நடை ஆய்வாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. போதிய பணியாளர்களை நியமிக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளன. 

பணியாளர்கள் நியமனம் செய்யப்படவும், மீண்டும் குஞ்சுகள் உருவாக்கம் செய்யப்படும். கொரோனா பரவல் காரணமாக பணியாளர்கள் நியமனம் தடைபட்டுள்ளது என்றார்.
Tags:    

Similar News