ஆன்மிகம்
திருவாபரண பெட்டி ஊர்வலம்(கோப்பு படம்)

சபரிமலை: திருவாபரண பெட்டி ஊர்வலத்தில் 100 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி

Published On 2020-12-21 07:29 GMT   |   Update On 2020-12-21 07:29 GMT
சபரிமலை மகரவிளக்கு பூஜை காலத்தில் நடக்கும் திருவாபரண பெட்டி ஊர்வலத்தில் 100 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வரவேற்பு அளிக்க, தீபாராதனை காட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் :

சபரிமலை ன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரு வார்கள். கொரோனா காரணமாக இந்த ஆண்டு பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன.

மேலும் தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் வழக்கமான நாட்களை விட கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மண்டல பூஜையை முன்னிட்டு  சுவா மிக்கு தங்கஅங்கி அணி விக்கப்படும். அதே போல் மகரவிளக்கு பூஜை தினத் தில் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். னுக்கு அணிவிக்கப்படும் திருவாப ரணங்கள் பந்தளம் அரண்மனையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வரு கின்றன.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக மண்டல பூஜை தினத்தில் னுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதே போல் திருவாபரண பெட்டி ஊர்வலத்திற்கும் கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டிருக் கின்றன.

இதுகுறித்து தேவசம் போர்டு தலைவர் வாசு கூறியதாவது:-

திருவாபரண பெட்டி ஊர்வலம் இந்த ஆண்டு ஜனவரி 12-ந்தேதி பந்தளம் அரண்மனையில் இருந்து புறப்படுகிறது. கடந்த ஆண்டு களை போன்று இந்த ஆண்டு ஊர்வலத்தில் பங்கேற்க அனைவருக்கும் அனுமதி இல்லை.

ஊர்வலத்தில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படு வார்கள். ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் உள்ளிட்ட அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக எடுத்திருக்க வேண்டும்.

திருவாபரண பெட்டிக்கு வழக்கமாக பல இடங்களில் வரவேற்பு கொடுக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு எந்த இடத்திலும் வரவேற்பு அளிக் கக்கூடாது. மேலும் தீபாரா தனையும் காட்டக்கூடாது. அவற்றிக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. திருவாபரண பெட்டியை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

பந்தளத்தில் இருந்து புறப்படும் திருவாபரண பெட்டி ஊர்வலம் நேராக பம்பைக்கு செல்லும். வேறு எங்கும் தங்காது. மகர விளக்கு பூஜை முடிந்து திரும்பி வரும்போது பெரு நாடு காக்காடு கோயக்கல் கோவிலில் மட்டும் தீபா ராதனை காட்டப்படும்.

டிசம்பர் 31-ந்தேதி முதல் சபரிமலைக்கு வரும் பக்தர் களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பரிசோதனைக்கு பின் கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்படும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப் படுவார்கள்.

தரிசனத்துக்கு 48 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனைக் கான நெகட்டிவ் சான்றிதழை பக்தர்கள் கட்டாயம் கொண்டுவரவேண்டும். டிசம்பர் 31-ந்தேதி முதல் ஜனவரி 19-ந்தேதி வரை இந்த நடைமுறை பின்பற்றப் படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News