தொழில்நுட்பம்
ஹூவாய் மேட் எக்ஸ்

மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட ஹூவாய் மேட் எக்ஸ்2 வெளியீட்டு தேதி அறிவிப்பு

Published On 2021-02-03 11:22 GMT   |   Update On 2021-02-03 11:22 GMT
ஹூவாய் நிறுவனம் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட மேட் எக்ஸ்2 மாடலின் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.


ஹூவாய் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்கிரீன் கொண்ட மேட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 22 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்த மேட் எக்ஸ்எஸ் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

புதிய மேட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் கிரின் 9000 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதே பிராசஸர் ஹூவாய் முன்னதாக அறிமுகம் செய்த மேட் 40 சீரிஸ் மாடல்களிலும் வழங்கப்பட்டு இருந்தது.



மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கென ஹூவாய் நிறுவனம் சுமார் 100 காப்புரிமைகளை பெற்று இருக்கிறது. இதனால் புதிய மாடலில் கணிசமான மேம்படுத்தல்கள் செய்யப்பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஹூவாய் மேட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் 8.01 இன்ச் 2480x2200 பிக்சல் மெயின் டிஸ்ப்ளே, 6.45 இன்ச் 2700x1160 பிக்சல் இரண்டாவது ஸ்கிரீன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 50 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி அல்ட்ரா வைடு, 12 எம்பி டெலிபோட்டோ கேமரா, 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படலாம்.
Tags:    

Similar News