செய்திகள்
ராம் நாத் கோவிந்த்

குடியரசு தலைவருக்கு வருமான வரி விலக்கா? வைரலாகும் தகவல்

Published On 2021-07-02 05:24 GMT   |   Update On 2021-07-02 05:24 GMT
இந்திய குடியரசு தலைவரின் மாதாந்திர சம்பளம் ரூ. 5 லட்சம் ஆகும். இத்துடன் குடியரசு தலைவருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

உத்தர பிரதேச மாநிலத்தின் கான்பூர் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தான் ஈட்டும் ரூ. 5 லட்சம் மாத வருவாயில் ரூ. 2.75 லட்சத்தை வரியாக செலுத்துவதாக தெரிவித்தார். கூட்டத்தில் மக்கள் கவனத்தை ஈர்க்க, `எனது மாத சம்பளம் கவர்ச்சிகரமானதாக தோன்றும், ஆனால் மாத சம்பளத்தில் ஒருபகுதியை வரியாக செலுத்துகிறேன்,' என அவர் தெரிவித்தார்.

குடியரசு தலைவர் மாத வருவாயில் இத்தனை லட்சங்களை வரியாக செலுத்துகிறாரா? என இணையத்தில் தேடிய போது, குடியரசு தலைவர் மாத சம்பளத்திற்கு வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என எந்த தகவலும் கிடைக்கப் பெறவில்லை. குடியரசு தலைவரின் மாத வருவாய் விவரங்கள் இணையத்தில் இல்லை.



பென்சன் சட்டம் 1951 படி குடியரசு தலைவரின் மாத வருவாய் ரூ. 5 லட்சம் ஆகும். எனினும், இந்த சட்டத்தில் குடியரசு தலைவரின் மாத வருவாய்க்கு வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என குறிப்பிடப்படவில்லை. சட்டப்படி குடியரசு தலைவருக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் சிறப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன. 
Tags:    

Similar News