தொழில்நுட்பம்
ஹானர் 9ஏ

பட்ஜெட் விலையில் ஹானர் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்

Published On 2020-08-01 05:42 GMT   |   Update On 2020-08-01 05:42 GMT
ஹானர் பிராண்டின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

ஹூவாயின் ஹானர் பிராண்டு இந்திய சந்தையில் ஹானர் 9எஸ் மற்றும் ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 மற்றும் மேஜிக் யுஐ 3 மற்றும் ஹூவாயின் ஆப் கேலரி ஸ்டோர் மற்றும் பெட்டல் சர்ச் வழங்கப்பட்டு உள்ளது.

ஹானர் 9எஸ் மாடலில் 5.45 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், ஒற்றை பிரைமரி கேமரா மற்றும் 3020 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. ஹானர் 9ஏ மாடலில் 6.3 இன்ச் ஸ்கிரீன், மூன்று பிரைமரி கேமராக்கள், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.



ஹானர் 9எஸ் சிறப்பம்சங்கள்

- 5.45 இன்ச் 1440×720 பிக்சல் 18:9 ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
- ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
- 2 ஜிபி ரேம்
- 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் மேஜிக் யுஐ 3.1
- டூயல் சிம் ஸ்லாட்
- 8 எம்பி கேமரா, f/2.0, எல்இடி ஃபிளாஷ்
- 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
- 3020 எம்ஏஹெச் பேட்டரி 

ஹானர் 9ஏ சிறப்பம்சங்கள்

- 6.3 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 20:9 டியூடிராப் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
- ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
- 3 ஜிபி ரேம்
- 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் மேஜிக் யுஐ 3.1
- டூயல் சிம் 
- 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, எல்இடி ஃபிளாஷ்
- 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 2 எம்பி டெப்த் கேமரா, f/2.4
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
- 5000 எம்ஏஹெச் பேட்டரி

ஹானர் 9எஸ் ஸ்மார்ட்போன் புளூ மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 6499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஆகஸ்ட் 6 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கிறது. ஹானர் 9ஏ மாடல் மிட்நைட் பிளாக் மற்றும் ஃபேண்டம் புளூ நிறங்களில் கிடைக்கிறது. 

இந்தியாவில் இதன் விலை ரூ. 9999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் இதன் விற்பனை அமேசான் தளத்தில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
Tags:    

Similar News