லைஃப்ஸ்டைல்
பெண்கள் சமையல் கியாஸ் சிலிண்டரை இப்படி பயன்படுத்தினால் விபத்தை தடுக்கலாம்

பெண்கள் சமையல் கியாஸ் சிலிண்டரை இப்படி பயன்படுத்தினால் விபத்தை தடுக்கலாம்

Published On 2020-06-09 04:44 GMT   |   Update On 2020-06-09 04:44 GMT
பெண்கள் விபத்துக்களை தடுக்க சமையல் கியாஸ் சிலிண்டர்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
மத்திய அரசின் 3 எண்ணெய் நிறுவனங்கள் பொது மக்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கிறது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் எடை குறைவாக இருப்பதாகவும், சீல் சரியாக இல்லை எனவும் அதிக அளவில் புகார்கள் வந்தன.

இதையடுத்து சமையல்  சிலிண்டர்களை வினியோகம் செய்யும் ஏஜென்சிஸ் மூலம் சிலிண்டர்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் எண்ணை நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

வீடுகளில் சமையல் கியாஸ் சிலிண்டரை வினி யோகம் செய்யும் போது அதன் எடை, சீல் ஆகியவை சரியாக இருக்கிறதா? என்பதை பொதுமக்கள் சரிபார்க்க வேண்டும். மேலும் சிலிண்டரில் உள்ள சீலை அகற்றி பயன்படுத்தி ஏற்ற நிலையில் உள்ளதா என்பதை ஊழியர்களைக் கொண்டு பரிசோதிக்க வேண்டும்.

2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கியாஸ் அடுப்பு, ரெகு லேட்டர் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ரப்பர் குழாய் ஆகியவற்றை பரிசோதிக்க வேண்டும் எதிர்பாராதவிதமாக சிலிண் டரில் கசிவு ஏற்பட்டால் உடனடியாக சிலிண்டரில் உள்ள ரெகுலேட்டரை ஆப் செய்ய வேண்டும். கியாஸ் லைட், தீக்குச்சியை பற்ற வைக்கக்கூடாது.

மின் விளக்கு சுவிட்சுகளை ஆன் செய்யக்கூடாது. ஜன் னல் மற்றும் கதவுகளை திறந்து அறைக்குள் காற்றோட்டத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும் 1907 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும் என்பது போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம். கியாஸ் ஏஜென்சி ஊழியர்கள் மூலம் இந்த பணி மேற் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News