ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி XL7

விரைவில் இந்தியா வரும் மாருதி XL7

Published On 2021-07-27 09:28 GMT   |   Update On 2021-07-27 09:28 GMT
மாருதி சுசுகி நிறுவன்தின் XL7 எம்.பி.வி. மாடல் இந்தியாவில் நெக்சா விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது.


மாருதி சுசுகி நிறுவனம் இந்த நிதியாண்டில் பல்வேறு கார் மால்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றில் சில மாடல்களை அந்நிறுவனத்தின் நெக்சா விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செய்ய இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் மாருதி நிறுவனம் நெக்சா பிரிவில் புதிதாக 7 சீட்டர் எம்.பி.வி. மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

இது XL6 மாடலின் 7 சீட்டர் வேரியண்ட்டாக இருக்கும் என்றும் இந்த மாடல் XL7 என அழைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தோனேசிய சந்தையில் மாருதி 7 சீட்டர் எம்.பி.வி. மாடலை விற்பனை செய்து வருகிறது. அங்கு இந்த மாடல் கடந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய XL6 7-சீட்டர் எம்.பி.வி. மாடலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது. 



அதன்படி புதிய அலாய் வீல்கள், அகலமான டையர்கள், காண்டிராஸ்ட் நிற பிளாக் ரூப், பின்புறம் ஸ்பாயிலர், மாடல் பேட்ஜிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதன் இந்தோனேசிய மாடலில் 8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, IRVM, மடிக்கக்கூடிய ஆர்ம்ரெஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

தற்போதைய XL6 மாடலில் 1.5 லிட்டர் கே15 பெட்ரோல் என்ஜின் மற்றும் SHVS (Smart Hybrid Vehicle by Suzuki) வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 103 பி.ஹெச்.பி. பவர், 138 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன், 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News