ஆட்டோமொபைல்
ஹார்லி டேவிட்சன் ஐயன் 883

ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் விலையில் அதிரடி மாற்றம்

Published On 2020-06-22 03:30 GMT   |   Update On 2020-06-22 03:30 GMT
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் தனது மோட்டார்சைக்கிள் மாடலின் விலையை அதிரடியாக மாற்றி உள்ளது.



ஹார்லி டேவிட்சன் ஐயன் 883 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் விலை இந்தியாவில் திடீரென உயர்த்தப்பட்டது. ஹார்லியின் ஸ்போர்ட்ஸ்டெர் மாடலான ஐயன் 883 பிஎஸ்6 விலை முன்பை விட ரூ. 12 ஆயிரம் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. 

அந்த வகையில் ஹார்லி டேவிட்சன் ஐயன் 883 பிஎஸ்6 விலை ரூ. 9.38 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் ரூ. 9.26 லட்சம் எனும் துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



ஹார்லி டேவிட்சன் ஐயன் 883 பிஎஸ்6 மாடலில் 883சிசி, வி ட்வின், ஏர் கூல்டு என்ஜின் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 70 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் மோட்டார்சைக்கிளின் முன்புறம் 39 எம்எம் ஷோவா டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டூயல் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுதவிர மோட்டார்சைக்கிளின் 19-16 இன்ச் வீல்களில் டிஸ்க் பிரேக் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் ஐயன் 883 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் டிரையம்ப் ஸ்பீடு ட்வின், டிரையம்ப் போன்வில் டி100 மற்றும் டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் கஃபே ரேசர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைந்து இருக்கிறது.
Tags:    

Similar News