செய்திகள்
கட்டுப்பாடு பகுதியில் தடுப்புகள் அகற்றப்பட்ட காட்சி.

கட்டுப்பாட்டு மண்டலங்கள் குறைப்பு

Published On 2021-06-08 09:21 GMT   |   Update On 2021-06-08 09:21 GMT
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் கட்டுப்பாட்டு மண்டலங்கள் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் கருப்பு பூஞ்சையால் 3 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிக மாக இருந்தது.தொற்றுபாதிப்பு  2ஆயிரத்தை தாண்டி பதிவாகியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதால் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைய ஆரம்பித்தது.

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 1,027 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  69 ஆயிரத்து 211-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 11 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை தற்போது 567-ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா குறைந்து  வருவதால் மாவட்டத்தில் 200ஆக இருந்த கட்டுப்பாட்டு மண்டலங்கள் 189ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கொரோனா பாதிப்பு காரணமாக   மாவட்டத்தில் தடுப்பூசி போட வருகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதன் காரணமாக திருப்பூருக்கு ஒதுக்கப்படும் தடுப்பூசிகள் அனைத்தும் விறு, விறுவென காலியாகி வந்தன.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக  மாநகரில் எந்த பகுதியிலும் தடுப் பூசி போடவில்லை. இத னால் பொதுமக்கள் அவதி யடைந்துள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள்  கூறுகையில், 

திருப்பூர் மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தடுப்பூசி மாவட்டத்திற்கு வர வரஅந்தந்த பகுதிகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தடுப்பூசி இருப்பும் இல்லை. ஏற்கனவே வந்த தடுப்பூசிகள் அனைத்தும் பொதுமக்களுக்கு செலுத்தப் பட்டு விட்டன.

தற்போது இருப்பு இல்லை என்பதால் கடந்த 2 நாட்களாக தடுப்பூசி போடவில்லை. தடுப்பூசி வந்தவுடன் அனைவருக்கும் செலுத்தப்படும் என்றனர். மேலும்  திருப்பூர் மாவ ட்டத்தில் 3 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகை யில், நீண்ட நாட்களாக படுக்கையில் இருந்து சிகிச்சை பெற்று வரும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட 3 பேருக்கு  கருப்பு பூஞ்சை அறிகுறி தென்பட்டது.3 பேரும் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எத்தகைய உடல் பாதிப்பாக இருந்தாலும் தொடக்கத்திலேயே கண்டறிந்தால் மீள்வது எளிதாகும் என்றனர்.
Tags:    

Similar News