செய்திகள்
குயின்டன் டி காக்

உணர்ச்சி ரீதியிலான மிகப்பெரிய தொடர் ஐபிஎல் என சொல்லக் காரணம்?- குயின்டன் டி காக் விளக்கம்

Published On 2019-09-17 16:09 GMT   |   Update On 2019-09-17 16:09 GMT
உலகக்கோப்பையை விட உணர்ச்சி ரீதியிலான மிகப்பெரிய தொடர் ஐபிஎல்-தான் என சொன்னதற்கு இதுதான் காரணம் என குயின்டன் டி காக் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 தொடர் மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2-வது போட்டி நாளை நடக்கிறது.

இந்த போட்டி குறித்து டி காக் பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது உலகக்கோப்பையை காட்டிலும் ஐபிஎல்-தான் உணர்ச்சி ரீதியிலான மிகப்பெரிய தொடர் எனக் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு டி காக் பதிலளிக்கையில் ‘‘நான் என்ன சொல்ல வேண்டும்?. நான் இதுவரை வெற்றி பெற்றதில் மிகப்பெரிய விஷயம். நான் உலகக்கோப்பையை இதுவரை வென்றது கிடையாது. ஆகவே, ஒருமுறை நான் உலகக்கோப்பையை வென்றால், எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நான் செய்ததை விட, அது மிகப்பெரியதாக இருக்கும்.

நான் ஒன்றிரண்டு அணிகளுக்கான ஐபிஎல் தொடரில் விளையாடிள்ளேன். அந்த அணிகள் பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறியதில்லை. நான் மும்பை அணிக்காக விளையாடினேன். அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஆகவே எந்தவொரு கிரிக்கெட்டருக்கும் இது மிகப்பெரிய சாதனையாகத்தான் இருக்கும். தற்போது கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும். உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடும் அணியில் ஒரு வீரராக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

தனிப்பட்ட முறையில் இது ஒவ்வொருவருக்கும் மாறுபட்டதாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். என்னுடைய கருத்து என்னுடையது. அவர்களுடைய கருத்து அவர்களுடையது. ஐபிஎல் கோப்பையை வென்றது இதுவரை என்னுடைய மிகப்பெரிய சாதனை’’ என்றார்.
Tags:    

Similar News