ஆன்மிகம்
செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டக்கூடாது ஏன் தெரியுமா?

செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டக்கூடாது ஏன் தெரியுமா?

Published On 2020-10-06 09:16 GMT   |   Update On 2020-10-06 09:16 GMT
செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ கூடாது என்று நம் வீடுகளில் பெரியவர்கள் சொல்வதை கேட்டு இருப்போம். இதற்கு காரணம் என்ன என்று அறிந்து கொள்ளலாம்.
செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ கூடாது என்று நம் வீடுகளில் பெரியவர்கள் சொல்வதை கேட்டு இருப்போம். இதற்கு காரணம் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா?

செவ்வாய் கிழமை என்பது துர்க்கை மற்றும் லட்சுமிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.

செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமிக்கு உரிய நாள் செவ்வாய். இதன் காரணமாக இந்த நாளில் செல்வத்தை வீட்டை விட்டு வெளியேற்ற பெரியவர்கள் மறுத்து வருகிறார்கள். நம்மிடம் உள்ள லட்சுமியை தானம் செய்தால், லட்சுமி சென்று விடுவாள் என்ற நம்பிக்கை பண்டைய காலம் முதல் தொன்றுதொட்டு இருந்து வருகிறது.

எப்படி முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ, நகம் வெட்டவோ கூடாதோ அதேப் போல் வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவி விடவோ அல்லது வீட்டில் உள்ள பழைய பொருட்களை தூக்கி எறியவோ மாட்டார்கள். இப்படி, செய்தால் வீட்டில் குடி கொண்டுள்ள லட்சுமி நம்மை விட்டு வெளியேறிவிடுவாள் என்ற நம்பிக்கை தான் முக்கிய காரணம்.
Tags:    

Similar News