செய்திகள்
கோப்புபடம்

தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியது

Published On 2021-07-02 08:37 GMT   |   Update On 2021-07-02 08:37 GMT
தமிழகத்தை பொருத்தவரை கடந்த மாதமே பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100-ஐ தாண்டிவிட்டது. சென்னையில் கடந்த 29-ந்தேதி பெட்ரோல் ரூ.99.80-க்கு விற்கப்பட்டது.

சென்னை:

பெட்ரோல்-டீசல் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து வருகிறது. பெட்ரோல் விலை தினமும் நிர்ணயிக்கப்பட்டாலும் 2 நாட்கள் அல்லது 3 நாட் களுக்கு ஒருமுறை தொடர்ந்து உயர்த்தப்பட்டே வருகிறது.

இதன்காரணமாக பல மாநிலங்களில் ஏற்கனவே பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100-ஐ தாண்டி விற்பனை ஆகிறது. சென்னையில் கடந்த மாதம் மட்டும் 14 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தை பொருத்தவரை கடந்த மாதமே பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100-ஐ தாண்டிவிட்டது. சென்னையில் கடந்த 29-ந்தேதி பெட்ரோல் ரூ.99.80-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு 3 நாட்களாக விலை உயர்த்தப்படவில்லை.

இந்தநிலையில் இன்று சென்னை உள்பட தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை அதிரடியாக உயர்ந்து 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ தாண்டியது.


சென்னையில் 33 காசுகள் அதிகரித்து இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.13-க்கு விற்கப்பட்டது. தமிழகத்திலேயே கள்ளக்குறிச்சியில் அதிகபட்சமாக பெட்ரோல் விலை ரூ.102.14-க்கு விற்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டரில் வருமாறு:-

எண்

                                            ஊர்

பெட்ரோல் விலை

1

1. சென்னை

ரூ.100.13

2

2. திருவள்ளூர்              

ரூ.100.45

3.

3. காஞ்சீபுரம்            

ரூ.100.79

4.

4. செங்கல்பட்டு

ரூ.100.73

5.

5. வேலூர்      

ரூ.101.31

6.

6. ராணிப்பேட்டை  

ரூ.101.09

7.

7. திருப்பத்தூர்        

ரூ.102.04

8.

8. திருவண்ணாமலை                                                       

ரூ.101.75

9.

9. கிருஷ்ணகிரி

ரூ.101.72

10.

10. தருமபுரி                

ரூ.101.31

11.

11. கள்ளக்குறிச்சி

ரூ.102.14

12.

12. கடலூர்    

ரூ.102.01

13.

13. சேலம்       

ரூ.100.95

14.

14. நாமக்கல்              

ரூ.100.83

15.

15. ஈரோடு    

ரூ.100.70

16.

16. பெரம்பலூர்  

ரூ.100.98

17.

17. அரியலூர்             

ரூ.101.02

18.

18. திருச்சி    

ரூ.100.57

19.

19. தஞ்சாவூர்  

ரூ.100.72

20.

20. திருவாரூர்           

ரூ.100.38

21.

21. நாகை      

ரூ.101.47

22.

22. கரூர்          

ரூ.100.42

23.

23. புதுக்கோட்டை

ரூ.100.94

24.

24. சிவகங்கை         

ரூ.100.93

25.

25. மதுரை    

ரூ.100.69

26.

26. ராமநாதபுரம்

ரூ.101.51

27.

27. தேனி        

ரூ.100.73

28.

28. திண்டுக்கல்  

ரூ.100.96

29.

29. திருப்பூர்                

ரூ.100.73

30.

30. கோவை                 

ரூ.100.63

31.

31. நீலகிரி    

ரூ.102.11

32.

32. ஈரோடு    

ரூ.100.70

33.

33. விருதுநகர்           

ரூ.100.77

34.

34. தென்காசி            

ரூ.100.82

35.

35. தூத்துக்குடி  

ரூ.100.46

36.

36. நெல்லை                

ரூ.100.44

37.

37. கன்னியாகுமரி

ரூ.101.07

38.

38. விழுப்புரம்           

ரூ.101.54

இதேபோல் டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் சென்னையில் கடந்த 4 நாட்களாக டீசல் விலை உயரவில்லை. சென்னையில் இன்று 1 லிட்டர் டீசல் ரூ.93.72-க்கு விற்கப்பட்டது.

Tags:    

Similar News