செய்திகள்
கனிமொழி

விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம்

Published On 2020-10-20 08:31 GMT   |   Update On 2020-10-20 08:31 GMT
நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது; ஆபத்தானது.

பெண்கள், குழந்தைகளை மிரட்டுவதுதான் கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம்.

வக்கிர மிரட்டல் விடுத்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News