ஆன்மிகம்
கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவில்

கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவிலில் அமாவாசை வழிபாட்டில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை

Published On 2021-10-01 05:48 GMT   |   Update On 2021-10-01 05:48 GMT
அரசு வழிகாட்டுதலின்படி வெள்ளி, சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 3-ந் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இளம்பிள்ளை அருகே உள்ள கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் பரமேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா ஊரடங்கு நடைமுறைகளுக்கு உட்பட்டு கஞ்சமலை சித்தேஸ்வரர் கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி முதல் காலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது. அரசு வழிகாட்டுதலின்படி வெள்ளி, சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 3-ந் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் வருகிற 6-ந் தேதி (புதன்கிழமை) அமாவாசை உற்சவத்தில் சாமி தரிசனம் செய்ய அதிகப்படியான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கொரோனா நோய் தொற்று பரவுதலை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் தரிசனத்திற்கு அன்றைய தினமும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே 6-ந் தேதியும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை உள்ளதால், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தவும், குளிக்கவும், பொங்கல் வைக்கவும், வழிபாடு செய்யவும், அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News