தொழில்நுட்பம்
5ஜி

இந்தியாவில் 5ஜி சோதனை துவங்க அனுமதி

Published On 2021-05-05 09:49 GMT   |   Update On 2021-05-05 09:49 GMT
இந்திய சந்தையில் முன்னணி நிறுவனங்கள் 5ஜி சோதனையை மேற்கொள்ள மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.


பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம், வோடபோன் ஐடியா மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் இந்தியாவில் 5ஜி சோதனையை மேற்கொள்ள மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சகம்  அனுமதி அளித்துள்ளது. 

இந்த நிறுவனங்கள் உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களான- எரிக்சன், நோக்கியா, சாம்சங் மற்றும் டெலிமேடிக்ஸ் துறையுடன் கூட்டணி அமைக்கும்.  



ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனம் தனது சொந்த தொழில்நுட்பத்தை கொண்டு சோதனையை மேற்கொள்ள இருப்பதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டது. இந்த சோதனைக்கான அவகாசம் ஆறு மாதங்கள் ஆகும். இதில் முதல் இரு மாதங்கள் உபகரணங்களை கட்டமைக்கலாம்.

சோதனைக்கான ஸ்பெக்ட்ரம் மிட்-பேண்ட் 3.2 GHz துவங்கி 3.67GHz வரையிலான பேண்ட்களிலும், மில்லிமீட்டர் வேவ் பேண்ட் 24.25GHz துவங்கி 28.5 GHz வரை வழங்கப்படுகிறது. இந்த நிறுவனங்கள் தற்போது இருக்கும் ஸ்பெக்ட்ரமிலேயே 5ஜி சோதனையை மேற்கொள்ளலாம்.

Tags:    

Similar News