செய்திகள்
கோப்புப்படம்

கேரளாவில் ஆர்எஸ்எஸ் நிலை என கூறி வைரலாகும் வீடியோ

Published On 2021-02-23 05:03 GMT   |   Update On 2021-02-23 05:03 GMT
கேரளா மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் நிலை இது என கூறி வைரலாகும் வீடியோ பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
 

கேரளாவில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. பாஜக கட்சி வலதுசாரி அமைப்பான ஆர்எஸ்எஸ் கொண்டு அம்மாநில தேர்தலுக்கு ஆயத்தமாகும் பணிகளில் ஈடுபட துவங்கி இருக்கிறது. கேரளாவில் முந்தைய அரசியல் போட்டி காரணமாக ஏற்பட்ட மோதல்களில் பல்வேறு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், மலபார் முஸ்லீம் பாரம்பரிய உடையில் சிலர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கொடிகளை ஏந்தி பிரிடிஷ் கால சீருடையில் இருக்கும் இருவரின் கைகள் கட்டப்பட்ட நிலையில், சாலையில் அழைத்து செல்லும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



கேரளாவின் செல்லாரி பகுதியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் ஊர்வலம். சிலர் ஆர்எஸ்எஸ் பணியாளர்களின் கைகளை கட்டி விலங்குகளை போன்று வீதியில் அழைத்து செல்கின்றனர். இவர்கள் ஐஎஸ்ஐஎஸ் பாணியில் கொண்டு செல்லப்படுகின்றனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் இதுபோன்ற ஊர்வலத்திற்கு கேரள அரசு எப்படி அனுமதி அளித்தது எனும் தலைப்பில் வைரல் வீடியோ பகிரப்படுகிறது.

இதனை ஆய்வு செய்ததில், அது 2021 பாப்புலர் பிரண்ட் தினத்தன்று நடைபெற்ற ஊர்வலம் என தெரியவந்தது. மேலும் அந்த வீடியோவில் உள்ள அனைவரும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஊழியர்கள் ஆவர். அந்த வகையில் வைரல் வீடியோவில் கைகள் கட்டப்பட்ட நிலையில் அழைத்து செல்லப்படுவோர் ஆர்எஸ்எஸ் பணியாளர்கள் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News