லைஃப்ஸ்டைல்
உடற்பயிற்சி

ஏரோபிக் உடற்பயிற்சி செய்யும் போது வார்ம் அப் செய்ய வேண்டுமா?

Published On 2021-06-02 02:35 GMT   |   Update On 2021-06-02 02:35 GMT
உங்களுக்கு ஏற்ற சரியான உடற்பயிற்சியை தேர்ந்தெடுத்து சரியாக செய்யும் போது பலன்களும் கிடைக்கும். ஆரோக்கியமும் மேம்படும்.
ஏரோபிக் உடற்பயிற்சி செய்யும் போது வார்ம் அப் மற்றும் கூல் டவுன் உடற்பயிற்சிகளைச் செய்ய ஒரு போதும் மறக்க வேண்டாம். வார்ம் அப் செய்யும் போது கை, கால்களை நீட்டி மடக்கி ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். அதே மாதிரி எடுத்த எடுப்பிலேயே உடற்பயிற்சியின் வேகத்தைக் கூட்டக் கூடாது.

மெதுவாக படிப்படியாக வேகத்தை அதிகப்படுத்த வேண்டும். இப்படி செய்யும் போது தசைகளுக்கு, மூட்டு களுக்கு சீராக இரத்தம் பாய்ந்து மூட்டுக் காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. வார்ம் அப் உடற்பயிற்சியை நீங்கள் 5-10 நிமிடங்கள் செய்தால் போதும்.

அதே மாதிரி கூல் டவுன் உடற்பயிற்சியை ஏரோபிக் செய்த பிறகு கடைசியாக படிப்படியாக அதன் வேகத்தை குறைத்து செய்யுங்கள். ஏரோபிக் உடற்பயிற்சிக்கு பிறகு கை கால்களை நீட்டிக்கும் உடற்பயிற்சியில் ஈடுபடுவது பொருத்தமாக இருக்கும்.

நீங்கள் ஏரோபிக் உடற்பயிற்சியில் தீவிரத்தை காட்ட விரும்பினால் வேகத்தை அதிகரிப்பது, எதிர்ப்பை அதிகரித்து செய்வது, செய்யும் நேரத்தை அதிகரிப்பது இந்த மூன்று காரணங்களில் ஒன்றையோ அல்லது இரண்டையோ அதிகப்படுத்துவதன் மூலம் ஏரோபிக் உடற்பயிற்சியின் தீவிரத்தை நீங்கள் அதிகப்படுத்த முடியும்.

இதையும் சில நிமிடங்கள் மட்டுமே செய்வது நல்லது. ஒரேடியாக வேகத்தை அதிகரிப்பதும், நேரத்தை அதிக ரிப்பது போன்ற வேலைகளிலும் ஈடுபட வேண்டாம். எதையும் படிப்படியாக செய்வதே உடலுக்கு ஏற்றதாக இருக்கும்.

எந்த உடற்பயிற் சியாக இருந்தாலும் உங்கள் உடலின் மொழியைப் புரிந்து கொண்டு அதன்படி செய்யுங்கள். உங்களுக்கு ஏற்ற சரியான உடற்பயிற்சியை தேர்ந்தெடுத்து சரியாக செய்யும் போது பலன்களும் கிடைக்கும். ஆரோக்கியமும் மேம்படும்.

Tags:    

Similar News