செய்திகள்
கோப்புபடம்

கீழக்கரை பெட்ரோல் பங்கில் பணம் கொள்ளை - முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு

Published On 2021-09-17 11:26 GMT   |   Update On 2021-09-17 11:26 GMT
கீழக்கரை பெட்ரோல் பங்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து முக்கிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

கீழக்கரை:

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் கடந்த 9-ந்தேதி பெட்ரோல் பங்குக்கு மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி கொள்ளையர்கள் ரூ. 1.75 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் கண்காணிப்பு காமிராவில் பதிவாகி தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின் பேரில், கீழக்கரை டி.எஸ்.பி. சுபாஷ் ஆலோசனையின் பேரில் குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் சிவலிங்கப்பெருமாள் தலைமையில், சிறப்பு சார்பு ஆய்வாளர் முனியாண்டி, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர்களை தேடி வந்தனர்.

கொள்ளையர்களின் மொபைல் போனின் சிக்னலை வைத்து அவர்கள் இருக்கும் இடத்தை கண்காணித்து வந்தனர்.

அவர்கள் திருப்பூரில் தங்கி இருப்பது தெரிய வந்ததும் போலீசார் அங்கு விரைந்தனர். இதற்கிடையே அவர்கள் 3 பேரும் கீழக்கரை திரும்பினர். கீழக்கரை வந்த போலீசார் சின்னமாயாகுளத்தை சேர்ந்த ராஜேஷ் (வயது 22), 500 பிளாட் பகுதியை சேர்ந்த நிமல்ராஜ் (22), கீழக்கரை வடக்குத் தெருவில் வசித்து வந்த பாலமுருகன் என்ற இம்தியாஸ் (24) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கீழக்கரையை சேர்ந்த ஒருவரின் ஆலோசனையின் பேரில் திருட்டில் ஈடுபட்டதாக கூறினர்.

அவர் பெட்ரோல் பங்க் அருகே. பணம் எண்ணும் நேரத்தை கண்காணித்து யாரும் பெட்ரோல் போட வரவில்லை என்பதை அறிந்து எங்களை அழைத்தார். அதைத் தொடர்ந்து அங்கு சென்று பணத்தை கொள்ளையடித்தோம் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து தப்பியோடிய முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.மேலும் விசாரணையில் மாயாகுளத்தில் திருடுபோன ஆட்டோ இந்த கும்பல் தான் திருடியதும் தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், 5 மொபைல் போன்களை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கொள்ளையடித்த பணத்தை குடித்து விட்டு பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளனர். திருடுபோன பணத்தை கைப்பற்ற முடியவில்லை.

இந்த கும்பல் கீழக்கரை பகுதியில் பல்வேறு திருட் டில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.

Tags:    

Similar News