ஆன்மிகம்
கன்னியாகுமரியில் ராமநவமி ரதயாத்திரைக்கு வரவேற்பு

கன்னியாகுமரியில் ராமநவமி ரதயாத்திரைக்கு வரவேற்பு

Published On 2021-04-21 06:21 GMT   |   Update On 2021-04-21 06:21 GMT
ரத யாத்திரை கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வழியாக பயணம் செய்து நேற்று கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வந்தடைந்தது.
ஸ்ரீராம நவமியை கொண்டாடும் விதமாக கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகா கோவிலில் இருந்து கடந்த 8-ந் தேதி ஸ்ரீராமநவமி ரத யாத்திரை தொடங்கியது. இந்த ரதத்தில் 3½ அடிஉயர ராமர், சீதை மற்றும் ஆஞ்சநேயர் சிலைகள் இடம் பெற்றுள்ளன.

இந்த ரத யாத்திரை கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வழியாக பயணம் செய்து நேற்று கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வந்தடைந்தது.

அங்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோவில் முன்பு ரதத்துக்கு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து ரதம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் நோக்கி புறப்பட்டு சென்றது.

Tags:    

Similar News