செய்திகள்
முககவசம்

கடந்த 25 நாட்களில் முக கவசம் அணியாத 7 லட்சம் பேர் மீது வழக்குப்பதிவு

Published On 2021-05-04 08:33 GMT   |   Update On 2021-05-04 08:33 GMT
தனி நபர் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்கள் மீது கடந்த 25 நாட்களில் 22,072 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னை:

தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியதால் பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்கள் மீதும், தனி நபர் இடைவெளியைப் பின்பற்றாதவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

கடந்த 8-ந்தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை 25 நாட்களில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது 7 லட்சத்து 3 ஆயிரத்து 504 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 3,658 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


தனி நபர் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்கள் மீது கடந்த 25 நாட்களில் 22,072 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 224 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 25 நாட்களில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது 25 ஆயிரத்து 251 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 247 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதே போல தனி நபர் இடைவெளியைப் பின்பற்றாதவர்கள் மீது போலீசார் 25 நாட்களில் 413 வழக்குகளை பதிவு செய்து அபராதம் வசூலித்துள்ளனர். இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Tags:    

Similar News