செய்திகள்

டிஎன்பிஎல் 2018- காஞ்சி வீரன்ஸ் அணியை 48 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது டூட்டி பேட்ரியாட்ஸ்

Published On 2018-07-15 13:25 GMT   |   Update On 2018-07-15 13:25 GMT
தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் இன்றைய முதல் ஆட்டத்தில் 48 ரன் வித்தியாசத்தில டூட்டி பேட்ரியாட்ஸ் காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தியது #TNPL2018
தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் டூட்டி பேட்ரியாட்ஸ் - விபி காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற டூட்டி பேட்ரியாட்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் எஸ் தினேஷ், கேப்டன் கவுசிக் காந்தி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தினேஷ் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்து சுப்ரமணியன் ஆனந்த் 27 பந்தில் பந்தில் 37 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த ராஜகோபால் சதிஷ் 9 பந்தில் 17 ரன்கள் சேர்த்தார்.

ஆனால் தொடக்க வீரராக களம் இறங்கிய கேப்டன் கவுசிக் காந்தி தொடக்கம் முதல் முடிவு வரை அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 68 பந்தில் 13 பவுண்டரி, 3 சிக்சருடன் 111 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க டூட்டி பேட்ரியாட்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது.



பின்னர் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் விபி காஞ்சி வீரன்ஸ் அணியினர் களம் இறங்கினர். தொடக்க வீரர் கே விஷால் வைத்யா 33 ரன்கள் சேர்த்தார். மற்றொரு தொடக்க வீரர் சித்தார்த் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.

கேப்டன் பாபா அபரஜித் 29 ரன்களும், வி சுப்ரமணிய சிவா 33 ரன்களும் எடுக்க விபி காஞ்சி வீரன்ஸ் அணியால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் டூட்டி பேட்ரியாட்ஸ் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Tags:    

Similar News