ஆன்மிகம்
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான்

திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் வீதி உலா புறப்பாடு ரத்து

Published On 2020-09-07 09:43 GMT   |   Update On 2020-09-07 09:43 GMT
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நாளை நடக்கவிருந்த நகர் வீதி சுவாமி புறப்பாடு ரத்து செய்யப்படுகிறது. அதற்கு மாறாக கோவிலுக்குள் உள்பிரகாரத்தில் மாலை 6 மணிக்கு சுவாமி புறப்பாடு நடைபெறும்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை தினத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் தங்கமயில் வாகனத்தில் அமர்ந்து நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களாக கோவில் மூடப்பட்டதையடுத்து கார்த்திகை தினத்தில் சுவாமி புறப்பாடு ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் 165 நாட்களுக்கு பிறகு கடந்த 1-ந்தேதி கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வருகிற 8-ந்தேதி கார்த்திகை நட்சத்திர நாளாகும். இந்த நாளில் வழக்கம்போல் அன்று முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை, கோவிலுக்குள் நடைபெறும். இதே சமயம் நகர் வீதி சுவாமி புறப்பாடு ரத்து செய்யப்படுகிறது.

அதற்கு மாறாக கோவிலுக்குள் உள்பிரகாரத்தில் மாலை 6 மணிக்கு சுவாமி புறப்பாடு நடைபெறும் என்று கோவில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News