செய்திகள்
வழக்கு பதிவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1,000 பேர் மீது வழக்கு

Published On 2021-05-15 12:35 GMT   |   Update On 2021-05-15 12:35 GMT
மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் போலீசார் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
மயிலாடுதுறை:

தமிழ்நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது உரிய நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர். அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் போலீசார் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 14 போலீஸ் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறி வியாபாரம் செய்த டீ கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட 30 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல முக கவசம் அணியாமல் வாகனங்களில் பயணம் செய்த 250 பேரிடம் அபராத தொகை ரூ.5 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிள்களில் முக கவசம் அணியாமலும், ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்தவர்கள் என மொத்தம் 1,000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டது.
Tags:    

Similar News