உள்ளூர் செய்திகள்
ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்திய விவசாயிகளை படத்தில் காணலாம்.

உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள்

Published On 2021-12-01 09:05 GMT   |   Update On 2021-12-01 09:05 GMT
அரசு கலைக்கல்லூரி கூட்ட அரங்கில் கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மடத்துக்குளம்:

உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாக்கள் உள்ளடக்கிய விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தொடங்கியது. கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ. கீதா தலைமை தாங்கினார். தாசில்தார் ராமலிங்கம், மடத்துக்குளம் தாசில்தார் சைலஜா, ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளர் விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழிவேல், இன்ஸ்பெக்டர் ராஜாகண்ணன், வனச்சரக அலுவலர் தனபாலன், மதுசூதனன், பாலதண்டபாணி, ரங்கநாதன், மௌனகுருசாமி, செந்தில்குமார், மனோகரன், கோபால், நல்லப்பன், சாதிக்பாட்சா, மூர்த்தி, குணசேகரன், பால் நாராயணன், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் உட்காருவதற்கு போதிய இடவசதி இல்லாததால் அலுவலக ஊழியர்கள் பணியாற்றும் அறையில் விவசாயிகள் தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

இதைத் தொடர்ந்து அரசு கலைக்கல்லூரி கூட்ட அரங்கில் கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பின்னர் கூட்டரங்கில் ஆர்.டி.ஓ. கீதா தலைமையில் தொடர்ந்து கூட்டம் நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் பதிலளித்தனர்.
Tags:    

Similar News