தொழில்நுட்பம்
பல்ஸ் ஆக்சிமீட்டர்

ரூ. 2 ஆயிரம் வரை செலவிட வேண்டாம் - பல்ஸ் அளவை செயலி மூலம் அறிந்து கொள்ளலாம்

Published On 2021-05-21 10:09 GMT   |   Update On 2021-05-21 10:09 GMT
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காலக்கட்டத்தில் பல்ஸ் ஆக்சிமீட்டர் சேவையை வழங்கும் மொபைல் செயலி வெளியாகி இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாவது அலை மிகத்தீவிரம் அடைந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் தொற்று பாதிப்பு கொண்டவர்கள் பல்ஸ் ஆக்சிமீட்டர் கொண்டு உடலில் சுவாச அளவு சீராக உள்ளதா என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கிறது.



எனினும், தரமான பல்ஸ் ஆக்சிமீட்டர் வாங்க குறைந்தபட்சம் ரூ. 2 ஆயிரம் வரை செலவிட வேண்டும். ஊரடங்கு காலக்கட்டத்தில் அனைவராலும் இவ்வளவு தொகையை செலவிட முடியாது என்பதை அறிந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் மொபைல் செயலி மூலம் ஆக்சிமீட்டர் பயன்பாட்டை வழங்குகிறது.

கொல்கத்தாவை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம், கேர்ப்ளிக்ஸ் வைட்டல்ஸ் எனும் பெயரில் செயலி ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த செயலி பயனரின் ஆக்சிஜன் அளவு, பல்ஸ், சுவாச அளவு உள்ளிட்டவைகளை கண்டறிந்து தெரிவிக்கும். செயலியை பயன்படுத்த கைவிரலை ஸ்மார்ட்போனின் கேமரா, பிளாஷ்லைட் மீது சில நொடிகளுக்கு வைக்க வேண்டும்.
Tags:    

Similar News