செய்திகள்
கோப்புபடம்.

திருப்பூர் மாவட்டத்தில் 4 சார்பதிவாளர்கள் பணியிடமாற்றம்

Published On 2021-07-20 11:21 GMT   |   Update On 2021-07-20 11:21 GMT
அமைச்சர் மூர்த்தியின் ஆய்வை தொடர்ந்து சார்பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டது பதிவுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி  ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் பல்வேறு புகார்களை தெரிவித்தனர். 

இந்தநிலையில் ஆய்வின் எதிரொலியாக 4 சார்-பதிவாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.கோவை பத்திரப்பதிவு மண்டலத்தில் 14 சார்-பதிவாளர்கள் அயல் பணி என்ற அடிப்படையில் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு டி.ஐ.ஜி., சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

அதில் திருப்பூர் மாவட்டத்தில் 4 பேர் இடமாற்றப்பட்டனர். அவ்வகையில் அவிநாசி சார்-பதிவாளர் (நிலை-1) ரகோத்மன், கோவை பதிவு மாவட்டம்  சீட்டு மற்றும் சங்கம் சார்-பதிவாளராகவும், மதுக்கரை சார்-பதிவாளர் இளங்கோ அவிநாசி சார்-பதிவாளராக இடமாற்றம்செய்யப்பட்டனர்.

அவிநாசி சார்-பதிவாளர் (நிலை-2) உதயசங்கர், திருப்பூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் சார்-பதிவாளராக (நிர்வாகம்) இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கிணத்துக்கடவில் பணியாற்றிய வெங்கிடுசாமி இடமாற்றப்பட்டார்.

திருப்பூர் ஜாயின்ட்-1 சார்-பதிவாளர் கனகராஜ் கோவை துணை பதிவு துறை அலுவலகத்துக்கும் (புலனாய்வு), தொட்டிபாளையம் சார்-பதிவாளர் உமா மகேஸ்வரி ஊட்டி பதிவு மாவட்டம் (வழிகாட்டி) சார்-பதிவாளராகவும் மாற்றப்பட்டனர்.

அமைச்சர் மூர்த்தியின் ஆய்வை தொடர்ந்து சார்பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டது பதிவுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் பலர் இடமாற்றம் செய்யப்பட உள்ளதால் பல அதிகாரிகள் கலக்கத்தில்  உள்ளனர்.
Tags:    

Similar News