செய்திகள்
விக்கிரமராஜா

ஆன்லைன் வர்த்தக விளம்பரத்தில் இருந்து விஜய்சேதுபதி விலக வேண்டும்- விக்கிரமராஜா

Published On 2019-11-04 06:07 GMT   |   Update On 2019-11-04 06:07 GMT
ஆன்லைன் வர்த்தக விளம்பரத்தில் நடிக்கும் நடிகர் விஜய் சேதுபதி உடனடியாக அதிலிருந்து விலக வேண்டும் என விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் நகர அனைத்து வணிகர் சங்கத்தின் சார்பில் 20-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது. சிறப்பு அழைப்பாளராக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

வெளிநாட்டு குளிர்பானத்தை முற்றிலுமாக விற்பனை செய்வதை தடுக்கும் விதத்தில் உள்ளூர் குளிர்பான குளிர்சாதன பெட்டிகளை கேட்டுள்ளோம். விரைவில் வெளிநாட்டு குளிர்பானங்களை விற்க தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்.

வியாபாரிகளை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.


 

இதனால் வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். உடனடியாக அந்த விளம்பரத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலக வேண்டுமென வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் அவரது வீட்டிற்கு சென்று நேரில் கடிதம் கொடுத்துள்ளோம். கண்டிப்பாக பரிசீலனை செய்வார். இல்லாவிட்டால் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

புதிய சினிமா படம் சி.டி.க்களாக வெளியிட்ட போது அதனை எதிர்த்து வணிகர் சங்க பேரமைப்பு குரல் கொடுத்தது. தற்போது வியாபாரிகளை காக்க நடிகர்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் நடிக்கக் கூடாது.

வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் 37-வது மாநில மாநாடு அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. அதற்கு பிரதமர் மோடியை அழைக்க உள்ளோம்.

பல பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பை குறைக்க மத்திய மந்திரியிடம் மனு அளித்துள்ளோம்.

ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த கட்டமாக மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News