செய்திகள்

வத்தலக்குண்டு பகுதியில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை அமோகம்

Published On 2018-09-07 09:36 GMT   |   Update On 2018-09-07 09:36 GMT
வத்தலக்குண்டு பகுதியில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை மீண்டும் அதிகரித்துள்ளது.

வத்தலக்குண்டு:

தமிழகத்தில் ஜனவரி 2019-ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் விற்க, தயாரிக்க தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

ஆனால் பெரும்பாலான இடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்தே வருகிறது. வத்தலக்குண்டு பகுதியில் அதிகாரிகள் மொத்த விற்பனையாளர்களை கண்டு கொள்ளாமல் சிறு வியாபாரிகளிடம் அதிக கெடுபிடி காட்டுவதாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இது குறித்து வியாபாரிகள் தெரிவிக்கையில், வத்தலக்குண்டுவில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனையின்போதும் பெரிய வியாபாரிகளை கண்டுகொள்வதில்லை. சிறு வியாபாரிகளிடமே கெடுபிடி காட்டுகின்றனர். குடோனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைக்கள், குட்கா ஆகியவற்றை பதுக்கி விற்கின்றனர். சாலையின் பெரும் பகுதியை ஆக்கிரமிக்கின்றனர்.

ஆனால் அதிகாரிகள் கவனிக்கப்படுவதால் அவர்களை கண்டுகொள்ளாமல் கண்துடைப்புக்காக சிறு வியாபாரிகளிடம் பொருட்களை பறிமுதல் செய்கின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News