செய்திகள்
கொரோனா பரிசோதனை (கோப்பு படம்)

கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்தது

Published On 2021-04-10 13:45 GMT   |   Update On 2021-04-10 13:45 GMT
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.
திருவனந்தபுரம்:

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் புதிய தொற்று அதிகரித்தவண்ணம் உள்ளது.

கேரளாவில் நேற்று 5,063 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று புதிய தொற்று 6 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று ஒரே நாளில்  6,194 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 2,584 பேர் குணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,15,342 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 4,767 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 39,778 ஆக உள்ளது.  

டெல்லியில் புதிதாக 7,897 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 5,716 குணமடைந்துள்ளனர், 39 பேர் உயிரிழந்துள்ளனர். 28,773 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Tags:    

Similar News