செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்-கண்காணிக்க பார்வையாளர் நியமனம்

Published On 2021-09-26 07:24 GMT   |   Update On 2021-09-26 07:24 GMT
திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம், வெள்ளகோவில் ஒன்றியங்களை உள்ளடக்கிய 10-வது வார்டு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் 1 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், 1 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 3 ஊராட்சி தலைவர்கள், 14 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என 19 பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் வருகிற 9-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு  மனு தாக்கல் தொடங்கி முடிந்தது. நேற்று வேட்பு மனு வாபஸ் முடிந்து இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 7 பேரும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 3 பேரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு 11 பேரும் போட்டியிடுகிறார்கள். 14 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியில் 7 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாக உள்ளனர். மீதம் உள்ள 7 பதவிக்கு 20 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். மொத்தம் 12 பதவிக்கு மொத்தம் 41 வேட்பாளர்கள்  போட்டியிடுகிறார்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம், வெள்ளகோவில் ஒன்றியங்களை உள்ளடக்கிய 10-வது வார்டு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. இந்த வார்டில் தி.மு.க., அ.தி.மு.க., உள்பட 12 பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர். 2 வேட்பு மனுக்கள் தள்ளுபடியானது. இந்த நிலையில் வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கு கடைசி நாளான நேற்று 3 பேர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர்.

இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல்  வெளியிடப்பட்டது. இதில் தி.மு.க. சார்பில் கிருஷ்ணவேணி வரதராஜ், அ.தி.மு.க.சார்பில் லட்சுமி சோமசுந்தரம், நாம் தமிழர் கட்சி சார்பில் வனிதா, அ.ம.மு.க சார்பில் ராதா, தே.மு.தி.க. சார்பில் கிருஷ்ணவேணி ஆகியோரும், 2 பேர் சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

மாவட்டத்தில்  தேர்தல்களை கண்காணிக்கும் வகையில் மாவட்ட தேர்தல் பார்வையாளராக சென்னை பூம்புகார் கப்பல் கழகத்தின் தலைவர் சிவசண்முகராஜா நியமிக்கப்பட்டுள்ளார். அவரை 95663 88446 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தேர்தல் நடைபெறும் இடங்களில் நடத்தை விதிகள் பின்பற்றாவிட்டால் புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News