செய்திகள்
ஆந்திர மாநிலம் தெலுங்கு தேச கட்சியின் முன்னாள் எம்.பி.யும், நடிகருமான நரமல்லி சிவபிரசாத்

சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஆந்திர முன்னாள் எம்.பி. மரணம்

Published On 2019-09-21 20:54 GMT   |   Update On 2019-09-21 20:54 GMT
ஆந்திர முன்னாள் எம்.பி.யும், நடிகருமான நரமல்லி சிவபிரசாத் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அமராவதி:

ஆந்திர மாநிலம் தெலுங்கு தேச கட்சியின் முன்னாள் எம்.பி.யும், நடிகருமான நரமல்லி சிவபிரசாத், சிறுநீரக நோய் தொற்றுக்கு சிகிச்சை பெறுவதற்காக சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் சிவபிரசாத்தை பார்த்து உடல்நலம் விசாரித்து சென்றார்.

இந்தநிலையில் நேற்று மதியம் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 69.

சிவபிரசாத்துக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

சித்தூரில் இருந்து 2 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட சிவபிரசாத், ஆந்திராவை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரியும் கருணாநிதி, எம்.ஜி.ஆர். நாரதர், ஹிட்லர் உள்பட பலரை போன்று வேடமணிந்து நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. சந்திரபாபு நாயுடு ஆட்சியின்போது தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சராகவும் இருந்துள்ளார். 
Tags:    

Similar News