ஆன்மிகம்
சுபநிகழ்ச்சிகளில் பூவும் தாருமாக குலையுடன் கூடிய வாழை மரத்தைக் கட்டுவது ஏன்?

சுபநிகழ்ச்சிகளில் பூவும் தாருமாக குலையுடன் கூடிய வாழை மரத்தைக் கட்டுவது ஏன்?

Published On 2021-02-03 06:36 GMT   |   Update On 2021-02-03 06:36 GMT
கல்யாணம் போன்ற சுபவிசேஷயங்களில் பூவும் தாருமாக குலையுடன் கூடிய வாழை மரத்தைக் கட்டுவதை பார்த்திருப்பீர்கள். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
“வாழையடி வாழையாக வையகத்துள் வாழ்வாங்கு வாழவேண்டும்’’ என்று வாழ்த்துவார்கள். வாழையடி வாழை என்பது பரம்பரையைக் குறிக்கும் சொல். வாழை  ஒன்றுதான் தனது நிழலுக்குக் கீழேயே மற்றொரு கன்றையும் உற்பத்தி செய்யக்கூடியது. எனவேதான் திருமணம் முதலான மங்கலச் சடங்குகளுக்கு வாயிலில் பூவும் தாருமாக குலையுடன் கூடிய வாழைமரங்களைக் கட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

இறைவனுக்கு நைவேத்யம் செய்யும் பழங்களில் முதன்மையான இடத்தினைப் பிடிப்பதும் வாழையே. புனிதத்தன்மையை உடைய இந்த மரங்கள் இருக்கும் இடத்தில் எந்தவிதமான தீயசக்திகளும் அண்டுவதில்லை. குலையுடன் கூடிய வாழை மரம் கட்டுவது என்பது வம்ச விருத்திக்காகவும், தங்கள் பரம்பரை செழிப்பாக வாழ வேண்டும் என்பதற்காகவும் என்பது நமது பாரம்பரிய நம்பிக்கை.
Tags:    

Similar News