உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.

நாகர்கோவில்-திருவனந்தபுரம் இரட்டை ரெயில் பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும்

Published On 2022-01-12 11:03 GMT   |   Update On 2022-01-12 11:03 GMT
நாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையேயான இரட்டை ரெயில் பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.
நாகர்கோவில்:

கொரோனா பரவல் காரணமாக தென்னக ரெயில்வே எம்.பி.க்கள் ஆலோ சனை குழு கூட்டம் இன்று காணொளி மூலமாக நடந் தது. கூட்டத்தில் எம்பிக்கள் பலர் கலந்துகொண்டனர். நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் விஜயகுமார் எம்.பி. கலந்து கொண்டார். 

அப்போது அவர் கூறிய தாவது:-

குமரி மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் ஏ.டி.எம். வசதி ஏற்படுத்த வேண்டும். நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்தில் ரெயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அங்கு இரவு நேரத்தில் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். 

நாகர்கோவில் திருவனந்தபுரம் இரட்டை ரெயில் பாதை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். சாமி தோப்பு, தெங்கன்குழி, பார்வதிபுரம் பகுதியில் ரெயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில்-ஹைதராபாத் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும். 

குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் சென்னைக்கு சென்று வருகிறார்கள். தற்போது இயக்கப்பட்டு வரும் ரெயிலில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்படுவதுடன் ஏராளமான பொதுமக்கள் டிக்கெட் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

எனவே சென்னைக்கு கூடுதல் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அவர் பேசினார். இதை தொடர்ந்து நாகர்கோவில் ரெயில் நிலையத்தை விஜயகுமார் எம்.பி. ஆய்வு செய்தார்.
Tags:    

Similar News