உள்ளூர் செய்திகள்
மழை

விழுப்புரம் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த இடி மழை

Published On 2022-05-07 10:06 GMT   |   Update On 2022-05-07 10:06 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி திண்டிவனம் உள்ளிட்ட சுற்று பகுதிகளிலும் சூறாவளி காற்றுடன் கூடிய கனத்த மழைபெய்தது.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் பல நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வெளியே செல்ல முடியாமல் தொடர்ந்து அவதியடைந்து வந்தனர்.

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கோடை மழை தொடங்கி கோடையின் வெப்பத்தை தணிக்க தொடங்கியது இந்நிலையில் தமிழகத்தில் குறிப்பாக வடமாவட்டங்களில் கனத்த சூறாவளி காற்று வீசும் என வானிலை நிலையம் அதிகாரி தெரிவித்தார்,

நேற்று மாலை 7 மணியளவில் குளிர்ந்த தென்றல் காற்று வீசத் தொடங்கியது மெல்ல மெல்ல இரவு 10.30 மணியளவில் அது சூறாவளி காற்றாக மாறி இரவு 11.00 மணியளவில் இடி மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்யத் தொடங்கியது இரவு 2.00 மணி வரை மழை பெய்தத .

விழுப்புரம் நகரில் சூறாவளி காற்றினால் விழுப்புரம் அய்யனார்குளம் மேற்குப்பகுதி உள்ள அரசமரம் பலத்த காற்றின் காரணமாக அப்பகுதியில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீதும் மற்றும் அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்மாற்றியின் மீதும் அம்மரம் விழுந்தது. இதனால் ஆட்டோவில் பயணம் செய்த பயணி மயிரிழையில் உயிர் தப்பினார்.

மின்மாற்றியின் மீது மரம் விழுந்ததால் மின் கம்பிகள் அறுந்து அந்த பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது. இரவு 11 மணியிலிருந்து இரவு 2 மணி வரை சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்ததால் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி திண்டிவனம் உள்ளிட்ட சுற்று பகுதிகளிலும் சூறாவளி காற்றுடன் கூடிய கனத்த மழைபெய்தது. இந்த மழை 2.30 நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் வழிந்தோடியது.

விழுப்புரம் மாவட்டத்தில் குறிப்பாக இந்த சூறாவளி காற்று தோட்டப் பயிர்களான வாழை தோப்புகளை கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் வெயில் தாக்கத்தினால் அவதிக்குள்ளாகி வந்த பொதுமக்கள் மற்றும் விவ சாயிகள், இரவு பெய்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News