உலகம்
ஜோஸ் ஏஞ்சல் ஹெர்னாண்டஸ்

விமான விபத்தில் பிரபல இசை அமைப்பாளர் உள்பட 9 பேர் பலி

Published On 2021-12-17 04:03 GMT   |   Update On 2021-12-17 04:03 GMT
விமான விபத்தில் இசை அமைப்பாளர் புளோ லா மூவி தன் மனைவி, குழந்தைகளுடன் பலியாகி இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சாண்டோ டொமிங்கோ:

கரீப்பியன் நாடான டொமினிகன் குடியரசில் தலைநகர் சாண்டோ டொமிங்கோவில் உள்ள லாஸ் அமெரிக்காஸ் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் தரை இறங்கும்போது ஒரு தனியார் விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 7 பயணிகளும், 2 சிப்பந்திகளும் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் பலியானவர்களில் பியூர்டோரிக்காவை சேர்ந்த பிரபல இசை அமைப்பாளர் புளோ லா மூவி என்று அழைக்கப்படுகிற ஜோஸ் ஏஞ்சல் ஹெர்னாண்டஸ் (வயது 38), அவரது மனைவி டெபி வோன் மேரி ஜிமெனேஸ் கார்சியா, அவர்களது குழந்தைகளும் அடங்குவார்கள்.

விபத்துக்குள்ளான விமானம், டொமினிக்கன் குடியரசு நாட்டின் லா இசபெல்லா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, புளோரிடாவுக்கு புறப்பட்டு சென்றபோது, அவசரமாக லாஸ் அமெரிக்காஸ் விமான நிலையத்தில் தரை இறங்கும்போதுதான் விபத்து நேரிட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்படுகிறது. இந்த விபத்தில் இசை அமைப்பாளர் புளோ லா மூவி தன் மனைவி, குழந்தைகளுடன் விமான விபத்தில் பலியாகி இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News