தொழில்நுட்பம்
ரெட்மி 8 சீரிஸ் ஓபன் சேல்

ஓபன் சேல் விற்பனையில் ரெட்மி நோட் 8 சீரிஸ்

Published On 2019-12-27 04:19 GMT   |   Update On 2019-12-27 04:19 GMT
இந்தியாவில் ரெட்மி நோட் 8 ப்ரோ, ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி 8 ஸ்மார்ட்போன்கள் ஓபன் சேல் விற்பனை துவங்கியுள்ளது.



சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி நோட் 8 ப்ரோ, ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி 8 ஸ்மார்ட்போன்களை ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்து வந்தது. அறிமுகமாகி இரண்டு மாதங்களாக ஃபிளாஷ் விற்பனை நடைபெற்று வந்த நிலையில், தற்சமயம் இவை ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.

அந்த வகையில் ரெட்மி நோட் 8 ப்ரோ, ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி 8 ஸ்மார்ட்போன்கள் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனை அமேசான், ப்ளிப்கார்ட், Mi அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.

இந்தியாவில் ரெட்மி நோட் 8 ப்ரோ துவங்க விலை ரூ. 14,999 என்று்ம ரெட்மி நோட் 8 ரூ. 9,999 என்றும் ரெட்மி 8 விலை ரூ. 7,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன் மற்றும் ஹெச்.டி.ஆர். வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனாக ரெட்மி நோட் 8 ப்ரோ இருக்கிறது. 

புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, 1/1.7″ சாம்சங் GW1 சென்சார் மற்றும் ISOCELL பிளஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 120 அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார், 2 எம்.பி. கேமரா கொண்டிருக்கிறது.

முன்புறம் 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 3டி வளைந்த கிளாஸ் பேக் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. 

ரெட்மி நோட் 8 சிறப்பம்சங்களை பொருத்தவரை 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார், 2 எம்.பி. மேக்ரோ சென்சார் மற்றும் 13 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.



பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் இருபுறங்களிலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வழ்கப்பட்டுள்ளது. ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ரெட்மி 8 ஸ்மார்ட்போனி்ல் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டாட் நாட்ச் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. 

புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX363 சென்சார், 2 எம்.பி. டெப்த் கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஔரா மிரர் வடிவமைப்பு, பின்புறம் கைரேகை சென்சார், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி, டூயல் சிம் ஸ்லாட் மற்றும் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் கொண்டிருக்கிறது. இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், யு.எஸ்.பி. டைப்-சி வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News