செய்திகள்
வங்காளதேசம் சென்றடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி

3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காளதேசம் சென்றடைந்தது

Published On 2021-01-10 14:37 GMT   |   Update On 2021-01-10 14:37 GMT
மூன்று ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காளதேசம் சென்றடைந்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காளதேசம் சென்று மூன்று போட்டிகள் கொண்ட் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும், இரண்டு போட்டிகளில் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாட இருக்கிறது.

ஜனவரி 20-ந்தேதி முதல் ஒருநாள் போட்டியும், 22-ந்தேதி 2-வது ஒருநாள் போட்டியும், 3-வது ஒருநாள் போட்டி ஜனவரி 25-ந்தேதியும் நடக்கிறது.

முதல் டெஸ்ட் பிப்ரவரி 3-ந்தேதியில் இருந்து பிப்ரவரி 7-ந்தேதி வரையும், 2-வது டெஸ்ட் பிப்ரவரி 11-ந்தேதி முதல் பிப்ரவரி 15-ந்தேதி வரையும் நடைபெறுகிறது.

இதற்கான வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காளதேசம் சென்றடைந்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டும். அதில் நெகட்டிவ் என வந்தால், பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
Tags:    

Similar News