தொழில்நுட்பம்
நோக்கியா

விரைவில் அறிமுகமாக இருக்கும் நோக்கியா 3.4

Published On 2020-09-02 07:53 GMT   |   Update On 2020-09-02 07:53 GMT
நோக்கியாவின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.


ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் 2020 ஐஎஃப்ஏ விழாவில் பங்கேற்க இருப்பதாக ஏற்கனவே தெரிவித்து இருக்கிறது. இந்த விழாவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி நோக்கியா 2.4 மற்றும் நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன்கள் இவ்விழாவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் டாக்டர் ஸ்டிரேன்ஜ் எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக தகவல் வெளியானது.



தற்சமயம் நோக்கியா 3.4 விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. அதன்படி புதிய ஸ்மார்ட்போன் மெல்லிய பெசல்கள் கொண்டிருக்கும் என்றும், இடதுபுறத்தில் பன்ச் ஹோல் கொண்ட ஸ்கிரீன் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. முன்னதாக நோக்கியா 8.3 மாடலும் இதேபோன்ற வடிவமைப்பை கொண்டிருந்தது.

நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் வட்ட வடிவ கட்-அவுட் கொண்டு உருவாகும் முதல் என்ட்ரி லெவல் மாடல் ஆகும். இது அதிக ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் வட்ட வடிவ கேமரா மாட்யூல் வழங்கப்படுகிறது. இதில் மூன்று கேமராக்கள், எல்இடி ஃபிளாஷ் யூனிட் வழங்கப்படுகிறது.

கேமரா சென்சார்களின் கீழ் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. நோக்கியா 3.4 மாடலில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 8 எம்பி செல்ஃபி கேமரா, 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மற்றும்  5 எம்பி கேமரா வழங்கப்பட இருக்கிறது.
Tags:    

Similar News