ஆட்டோமொபைல்
ஹீரோ மோட்டோகார்ப்

இந்திய உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்திய ஹீரோ மோட்டோகார்ப்

Published On 2021-04-21 09:28 GMT   |   Update On 2021-04-21 09:28 GMT
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலக ஊழியர்கள் கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக வீட்டில் இருந்தபடி பணியாற்றி வருகின்றனர்.


ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் கொரோனாவைரஸ் பாதிப்பு தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.



ஒவ்வொரு ஆலை மற்றும் சர்வதேச பாகங்கள் மையம் நான்கு நாட்களுக்கு மூடப்பட்டு இருக்கும். உள்ளூரில் கொரோனா பாதிப்பு நிலையை பொருத்து ஏப்ரல் 22 முதல் மே 1 வரை சீரற்ற முறையில் இந்த நடவடிக்கை தொடரும் என ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்து உள்ளது.

உற்பத்தி ஆலை மூடப்பட்டு இருந்தாலும், கார்ப்பரேட் அலுவலக பணிகள் தொடர்ந்து நடைபெறும். கார்ப்பரேட் அலுவலக ஊழியர்கள் ஏற்கனவே வீட்டில் இருந்தபடி பணியாற்றி வருகின்றனர். சுழற்சி முறையில் குறைந்த ஊழியர்களை மட்டும் அலுவலகம் வர ஹீரோ உத்தரவிட்டு இருக்கிறது.

Tags:    

Similar News