தொழில்நுட்பம்
ஜெப் சவுணட் பாம்ப் ஹெட்போன்

ஜெப்ரானிக்ஸ் புதிய ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-12-18 05:47 GMT   |   Update On 2019-12-18 05:47 GMT
ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஜெப் சவுணட் பாம்ப் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.



ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஜெப் சவுணட் பாம்ப் என்ற பெயரில் புதிதாக ப்ளூடூத் வயர்லெஸ் ஹெட்ஃபோனை அறிமுகம் செய்துள்ளது. 

இசை வகைகள், சவுண்ட் டிராக்குகள், பின்னணி இசை ஆகியவற்றின் உண்மையான அனுபவத்தைப் பெற ஏதுவாக புதிய ஹெட்போனை ஜெப்ரானிக்ஸ் உருவாக்கி இருக்கிறது. ஜெப்ரனிக்ஸ் நிறுவனத்தின் புதிய சவுண்ட் பாம்ப் ஹெட்ஃபோன் மிகவும் நுண்ணிய அளவில் தெளிவான இசையை வழங்குவதன் மூலம், இசை கேட்கும் அனுபவத்தை சிறப்பாக மேம்படுத்துகிறது.

புதிய ஹெட்போன் மென்மையான தோற்றம், பளபளப்பான மேற்புறம், எளிமையாக இயக்கக்கூடிய அமைப்பு, சிரமமின்றி சாதனத்துடன் இணைத்தல் போன்றவை இதன் சிறப்பம்சங்களாக இருக்கிறது. இந்த ஹெட்ஃபோன்கள் காதிற்குள் செருகும் வகையிலும் கீழே விழாதவாறு நிலையாகக் காதில் பொருந்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.



முழுமையான வயர்லெஸ் இயர்போனான ஜெப் சவுண்ட் பாம்ப் டச் கண்ட்ரோல் மூலம் அனைத்து அம்சங்களையும் இயக்க முடியும். இசையை இயக்க/இடைநிறுத்த மேலே உள்ள பட்டனைத் தொட்டாலே போதும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். சாதனங்களில் வாய்ஸ் அசிஸ்டண்டை இயக்குவதற்கு, பட்டனை இருமுறை தொட வேண்டும். சாதனத்தை அழுத்திப் பிடிப்பதன் மூலம் ஹெட்போனை ஆன் அல்லது ஆஃப் செய்யலாம்.

புதிய ஜெப் சவுண்ட் பாம்ப் இயர்போனினை ஒருமுறை சார்ஜ் செய்தால் 6 மணிநேர ப்ளேபேக், சார்ஜிங் கேஸ் பயன்படுத்தி 18 மணிநேரம் வரை ப்ளேபேக்கை நீட்டிக்க முடியும். இதற்கான சார்ஜிங் கேஸ் மிகவும் எளிதாக பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக் கூடிய வகையில் கச்சிதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய ஜெப் சவுண்ட் பாம்ப் கருப்பு, வெள்ளை, சிவப்பு மற்றும் கருப்பு நிறக் கலவை ஆகிய வண்ணங்களில், முன்னணி ரீடெய்ல் ஸ்டோர்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இந்த ஹெட்போன் தற்சமயம் ரூ. 2429 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
Tags:    

Similar News