செய்திகள்
போரிஸ் ஜான்சன் - நரேந்திரமோடி (கோப்பு படம்)

பிரதமர் மோடி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பேச்சுவார்த்தை

Published On 2020-11-27 16:23 GMT   |   Update On 2020-11-27 16:23 GMT
இந்திய பிரதமர் நரேந்திரமோடி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
புதுடெல்லி:

இந்திய பிரதமர் நரேந்திரமோடி பல்வேறு நாட்டு தலைவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பல விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார். 

அந்த வரிசையில் பிரதமர் மோடி இன்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது இருநாட்டு உறவு, கொரோனா வைரசை எதிர்கொள்வது, வர்த்தகம், பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இணைந்து செயல்படுவது குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக இந்திய பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

இந்திய-இங்கிலாந்து உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது தொடர்பாக எனது நண்பர் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் சிறப்பான பேச்சுவார்த்தை நடத்தினேன்.

கொரோனாவை எதிர்கொள்தல், பருவநிலை மாற்றம், பாதுகாப்புத்துறை, வர்த்தகம், முதலீடு உள்பட அனைத்து துறைகளிலும் இணைந்து செயல்பட இருநாடுகளும் சம்மதம் தெரிவித்துளது.

என்றார்.
Tags:    

Similar News