ஆன்மிகம்
நவதிருப்பதி

நெல்லையில் இருந்து இன்று நவதிருப்பதி கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

Published On 2020-09-19 08:13 GMT   |   Update On 2020-09-19 08:13 GMT
புரட்டாசி சனிக்கிழமையையொட்டி நெல்லையில் இருந்து நவதிருப்பதி கோவில்களுக்கு அரசு சிறப்பு பஸ் இன்று (சனிக்கிழமை) இயக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாகும். இந்த சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் கருட சேவை கோலாகலமாக நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, பெருங்குளம், இரட்டை திருப்பதி, தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி ஆகிய பெருமாள் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இந்த கோவில்களுக்கு நெல்லையில் இருந்து சிறப்பு பஸ்கள் செல்லும்.

இந்த ஆண்டும் இன்று (சனிக்கிழமை) காலை7 மணிக்கு நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ் புறப்படுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக பஸ்சில் 35 இருக்கைகள் மட்டும் அமைக்கப்பட்டு உள்ளன. இதேபோல் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒரு நபருக்கு பஸ் கட்டணம் ரூ. 500 ஆகும். நவதிருப்பதி கோவில்களுக்கு செல்ல முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News