ஆட்டோமொபைல்
ஆஸ்டன் மார்டின் லிமிட்டெட் எடிஷன் டீசர்

லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிளை உருவாக்கும் ஆஸ்டன் மார்டின்

Published On 2019-10-29 10:24 GMT   |   Update On 2019-10-29 10:24 GMT
ஆஸ்டன் மார்டின் நிறுவனம் விரைவில் லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிளை உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



ஆஸ்டன் மார்டின் நிறுவனம் பிரிட்டனை சேர்ந்த சுப்பீரியர் நிறுவனத்துடன் இணைந்து லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிளை உருவாக்க இருக்கிறது. இருநிறுவனங்கள் இணைந்து உருவாக்கும் முதல் மோட்டார்சைக்கிள் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் EICMA 2019 விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. 

ஆடம்பர வாகனங்களை தயாரிக்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இணைந்து தலைசிறந்த வடிவமைப்பு மற்றும் பொறியியல் திறன்மிக்க மோட்டார்சைக்கிளை காட்சிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மோட்டார்சைக்கிள் நிச்சயம் லிமிட்டெட் எடிஷன் மாடலாக இருக்கும் என ஆஸ்டன் மார்டின் தெரிவித்துள்ளது.

EICMA 2019 நிகழ்வில் முதல்முறையாக ஆஸ்டன் மார்டின் பிராண்டிங் மற்றும் லோகோ உள்ளிட்டவை மோட்டார்சைக்கிளில் இடம்பெற இருக்கிறது. EICMA 2019  விழா நவம்பர் 5 ஆம் தேதி துவங்குகிறது. இந்த விழா இத்தாலியில் நடைபெற இருக்கிறது.



இங்கிலாந்தை சேர்ந்த புரோ சுப்பீரியர் 1919 முதல் 1940 வரை மோட்டார்சைக்கிள், சைடுகார் மற்றும் கார்களை தயாரித்து வந்தது. இந்நிறுவனம் தயாரித்த வாகனங்கள் மோட்டார்சைக்கிள் பிரிவில் ரோல்ஸ் ராய்ஸ் பிராண்டுக்கு இணையான அளவு பிரபலமாக பார்க்கப்பட்டன. இந்நிறுவனம் மொத்தம் 3048 மோட்டார்சைக்கிள்களை தயாரித்தது.

புரோ சுப்பீரியர் பெயரை ஜெர்சி ரெஜிஸ்டர் கார்ப்பரேஷன் கைப்பற்றி பாக்ஸ் வடிவமைப்பு கொண்ட எஸ்.எஸ்.100 மாடலை உருவாக்கியது. இந்த மோட்டார்சைக்கிளில் 88 டிகிரி 990சிசி என்ஜின் கொண்டிருந்தது. இந்த மாடல் EICMA 2013 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. 
Tags:    

Similar News