தொழில்நுட்பம்
ஸ்டீவ் ஜாப்ஸ்

விற்பனையில் 14 ஆண்டுகளை கடந்த ஐபோன்

Published On 2021-06-30 12:10 GMT   |   Update On 2021-07-02 05:17 GMT
2007 ஆம் ஆண்டு ஆப்பிள் வெளியிட்ட முதல் ஐபோன் பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டிருந்தது.


ஆப்பிள் தனது முதல் ஐபோனினை வெளியிட்டு 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஸ்டீவ் ஜாப்ஸ் 2007, ஜனவரி மாதத்தில் முதல் ஐபோனினை அறிமுகம் செய்தார். இந்த மாடல் ஜூன் 29, 2007 அன்று விற்பனைக்கு வந்தது. இன்று உலகமே ஐபோன் 13 சீரிஸ் மாடல் விவரங்களை அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது. 

தற்போதைய ஐபோன்களுடன் ஒப்பிடும் போது முதன் முதலில் வெளியான ஐபோன், அம்சங்கள் அடிப்படையில் மிகவும் சாதாரண மாடலாகவே இருந்தது. எனினும், அன்றைய தேதியில் ஐபோன் பல்வேறு புதுமையான அம்சங்களை கொண்டிருந்தது. ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட முதல் ஐபோன் புல் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன், மல்டி-டச் ஜெஸ்ட்யூர்கள் என ஏராளமான அம்சங்களை கொண்டிருந்தது.



ஆப்பிள் நிறுவனம் ஐபோனை உருவாக்கும் பணிகளை 2005 ஆம் ஆண்டு துவங்கியது. பின் இரண்டு ஆண்டுகள் கழித்தே முதல் ஐபோன் மாடல்  விற்பனைக்கு வந்தது. முதல் ஐபோனின் விற்பனை ஜூன் 29, 2007 மாலை 6 மணிக்கு துவங்கியது. ஐபோனை வாங்க ஆறு மாதங்கள் காத்திருந்த வாடிக்கையாளர்கள் அன்று ஆப்பிள் ஸ்டோர் வாயிலில் புது சாதனத்தை வாங்க வரிசைகட்டி நின்றனர்.

முதல் ஐபோனின் விலை 499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 37,124 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை 599 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 44,563 என நிர்ணயம் செய்யப்பட்டது. ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஐபோன் குறித்து மைக்ரோசாப்ட், பிளாக்பெரி போன்ற நிறுவனங்கள் கேலி செய்யும் வகையிலான கருத்துக்களை தெரிவித்தன. எனினும், இன்று ஐபோன்கள் உலகம் முழுக்க பிரபலமான ஸ்மார்ட்போனாக இருக்கிறது. 

ஆப்பிள் வெளியிட்ட முதல் ஐபோனில் ஆப் ஸ்டோர் இன்றி ஐபோன்ஒஎஸ் வழங்கப்பட்டு இருந்தது. இத்துடன் சாம்சங்கின் 32-பிட் ARM சிப், 3.5 இன்ச் LCD டிஸ்ப்ளே, 1400 எம்ஏஹெச் பேட்டரி, 2 எம்பி பிரைமரி கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டன. ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஐபோன் மாடல் விற்பனை ஜூலை 15, 2008 அன்று நிறுத்தப்பட்டது.
Tags:    

Similar News