செய்திகள்
மத்திய மந்திரி நிதின் கட்காரி

சாலை விபத்துகளை குறைத்த சிறந்த மாநிலம் தமிழகம் - மத்திய மந்திரி விருது வழங்கினார்

Published On 2021-01-19 00:04 GMT   |   Update On 2021-01-19 00:04 GMT
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பணியில் சிறப்பாக செயல்பட்டு விபத்துகளை குறைத்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு மத்திய மந்திரி நிதின் கட்காரி விருது வழங்கினார்.
புதுடெல்லி:

சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் நேற்று தொடங்கியது. மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் டெல்லி விஞ்ஞான பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதை தொடங்கி வைத்தனர். நெடுஞ்சாலைத்துறை இணை மந்திரி வி.கே.சிங், நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் கண்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பணியில் சிறப்பாக செயல்பட்டு விபத்துகளை குறைத்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. மேலும் சில மாநிலங்கள், அமைப்புகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை மத்திய மந்திரி நிதின் கட்காரி வழங்கினார். தமிழகத்துக்கான விருதை போக்குவரத்து கூடுதல் ஆணையர் மணக்குமார் பெற்றுக்கொண்டார்.

இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அடுத்த மாதம் (பிப்ரவரி) 17-ந்தேதி வரை நடக்கிறது.
Tags:    

Similar News