செய்திகள்
காரைக்கால் துறைமுகத்திற்கு வந்த 10 ஆயிரம் டன் யூரியா

காரைக்கால் துறைமுகத்திற்கு 10 ஆயிரம் டன் யூரியா சரக்கு கப்பலில் வந்தது

Published On 2020-10-22 09:18 GMT   |   Update On 2020-10-22 09:18 GMT
ஓமன் நாட்டில் இருந்து இரண்டாவது கட்டமாக 10 ஆயிரம் டன் யூரியா உரம் காரைக்கால் துறைமுகத்திற்கு சரக்கு கப்பலில் வந்து இறங்கியது.
நன்னிலம்:

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படியும், அமைச்சர் காமராஜ் ஏற்பாட்டின்படியும் திருவாரூர், தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையத்தின் மூலம் ஓமன் நாட்டில் இருந்து இரண்டாவது கட்டமாக 10 ஆயிரம் டன் யூரியா உரம் காரைக்கால் துறைமுகத்திற்கு சரக்கு கப்பலில் வந்து இறங்கியது.

இதனை தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணைய தலைவரும், ஒன்றிய துணைத்தலைவருமான சி.பி.ஜி.அன்பழகன், இணைபதிவாளரும், மேலாண்மை இயக்குனருமான உமாமகேஸ்வரி, துணைத்தலைவர் நாராயணசாமி, துணை பதிவாளரும், செயலாளருமான ஜெயமணி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து யூரியா உரம் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது. இதன் மூலம் டெல்டா மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு தட்டுப்பாடின்றி உரங்களை பெற்றுக்கொள்ளலாம்.
Tags:    

Similar News